அமுதா உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையராக சமீரன் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி. ஆக அருண் சுந்தர் தயாளன் IAS நியமிக்கப்பட்டுள்ளார். CMDA உறுப்பினர் செயலராக ராகுல் நாத் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS – தமிழ் நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை செயலாளராக அமுதா IAS, நீர்வளத் துறை செயலாளராக சத்யபிரத சாகு IAS, போக்குவரத்துத் துறை செயலாளராக S.J.சிரு IASம் எரிசக்தித் துறை செயலாளராக அணில் மேஷ்ரம் IAS, போக்குவரத்துத் துறை செயலாளராக வள்ளலார் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author