இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக விளங்கும் அமெரிக்கா

அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது இணைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் மார்ச் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா தனது புவிசார் அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்கு நேரடியாக சேவை புரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைக் கோருகிறது. இது உலகளவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சீனா தனது சொந்த இணைய பாதுகாப்பை பேணிக்காப்பதற்காக அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author