அமெரிக்கா முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் உடன், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் விவாதத்தில் ஈடுபாட்டார்.
டொனால்ட் டிரம்ப், தான் இன்னும் வெள்ளை மாளிகையில் இருந்திருந்தால், காசாவில் ஹமாஸுடன் இஸ்ரேலின் தற்போதைய போர் “ஒருபோதும் தொடங்கியிருக்காது” என்று கூறினார்.
இதுவே கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இஸ்ரேல் ஒரு தேசமாக இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்த அவர், யூத அரசை அவர் வெறுக்கிறார் என்றும் கூறினார்.
“அவர் அதிபராக இருந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் இருக்காது என்று நான் நம்புகிறேன்,” என்று செவ்வாய்க்கிழமை இரவு பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸுடனான தனது முதல் ஜனாதிபதி விவாதத்தின் போது டிரம்ப் கூறினார்.
டிரம்ப் vs ஹாரிஸ்: இஸ்ரேல், ரஷ்யா, சர்வாதிகாரம் என காரசாரமாக நடைபெற்ற விவாதம்
