இந்திய விமான விபத்து குறித்து, முர்மு மற்றும் மோடிக்கு ஷிச்சின்பிங் ஆறுதல் செய்தி

Estimated read time 1 min read

அகமதாபாத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய விமான விபத்து குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 13ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

அதில் ஷிச்சின்பிங் கூறுகையில், கடும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்தியாவின் பயணியர் விமான விபத்து பற்றி கேட்டறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தோர்களுக்கு சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், காயடைந்தவர்கள் கூடிய விரைவில் குணமடைவதாக வாழ்த்துக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

You May Also Like

More From Author