தெலுங்கு படவுலகில் பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா, 21 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் சமீபத்தில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர் பல மாதங்களாக ஜானியுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு நடன இயக்குனர் எனக்கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீசில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                                     
                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                