‘ஜன நாயகன்’ பாக்ஸ் ஆபீஸ் வேட்டை ஆரம்பம்! அட்வான்ஸ் புக்கிங்கில் Rs.15 கோடி வசூல் செய்து சாதனை  

Estimated read time 1 min read

பல மாத எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, விஜய்யின் ‘ஜனநாயகன்’ நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனைகளை படைத்து, அதிகாலை காட்சிகளுடன் நாடு முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே, பிளாக் செய்யப்பட்ட சீட்களையும் சேர்த்து ₹15 கோடிக்கும் அதிகமான முன்பதிவு வசூலை எட்டியுள்ளது.
பிளாக் சீட்களைத் தவிர்த்து ₹10 கோடிக்கும் அதிகமாக டிக்கெட் விற்பனையாகியுள்ளது.
நாடு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.
தமிழ் பதிப்பில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட காட்சிகளுக்கு 4.17 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
படம் வெளியாவதற்கு முன்பே BookMyShow செயலியில் 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி, இந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனைப் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது.

You May Also Like

More From Author