சீனா மீது சுங்க வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு பாதிப்பு

சீனா மீது 301 எண் சுங்க வரி வசூலிப்பு தொடரும் அடிப்படையில், சீனாவின் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான சுங்க வரியை மேலும் உயர்த்துவதாக அமெரிக்க அரசு கடந்த மே திங்களில் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, சீனாவின் தயாரிப்புகள் மீது கூடுதலான சுங்க வரி வசூலிப்பது பற்றிய இறுதி அறிக்கையை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் அண்மையில் வெளியிட்டது.

இந்த ஒருதலைப்பட்ச  மற்றும் பாதுகாப்புவாத செயல், சீனாவின் வளர்ச்சியை தடை செய்வதிலும், சீனாவுடனான தொடர்பை துண்டிப்பதிலும் அமெரிக்கா தேடுவதில்லை என்கிற அமெரிக்காவின் வாக்குறுதியை மீறியது. அதோடு, இது, இரு நாட்டு தலைவர்களும் உருவாக்கிய ஒத்த கருத்துக்களை மீறியது. அமெரிக்கா சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதை இது வெளிகாட்டியது.

சீனா மீது கூடுதலான சுங்க வரியை வசூலிப்பதன் பின்னணியில், அரசியல் காரணி முக்கிய காரணமாக இருக்கின்றது. அமெரிக்க பொது தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கிடையேயான போட்டி நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதல், கூறப்படும் சரியான அரசியல் கொள்கையைக் கடைப்பிடித்து, சீனா மீது கடின நிலைப்பாட்டை காட்டுகின்றன என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

தவிர, சுங்க வரியை அதிகரிப்பது, உண்மையான பிரச்சினையைத் தீர்க்க தவறியது மட்டுமல்லாமல், அமெரிக்காவைப் பாதிக்கின்றது. சீனா மீது சுங்க வரியை அதிகரிக்க தொடங்கிய பின், அமெரிக்க தொழில் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு, மொத்தம் 22100கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுத்தியது என்று அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப துறையின் தகவல் தொழில் நுட்ப தொழில் மன்றத் தலைவர் ஜேசன் ஆக்ஸ்மேனின் கூற்றை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 14ஆம் நாள் கூறியது.

சுங்க வரியை அதிகரிப்பதன் மூலம், அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தொழில் சங்கிலியை தனது நாட்டில் இடமாற்றம் செய்ய அமெரிக்க அரசு விரும்புகின்றது. ஆனால், அமெரிக்காவின் இந்த முயற்சியில் பயன் குறைவாக உள்ளது. தனது நாட்டின் இறக்குமதி செலவு அதிகரித்ததுடன், சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கும் இலக்கை அமெரிக்கா அடையவில்லை என்று தொடர்புடைய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது.தவிரவும், அமெரிக்க வரி நிதியத்தின் புள்ளிவிவரத்தின்படி, சீனா மீது கூடுதலான சுங்க வரியை வசூலிப்பது, அமெரிக்க தொழிலாளர்கள் வேலை பிரச்சினையைத் தீர்க்காமல், அமெரிக்காவில் ஒரு லட்சத்து 42ஆயிரம் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டன.

குறைய வழிகாட்டியது. பாதுகாப்புவாதம் வேலை வாய்ப்பை உருவாக்க துணைபுரியும் என்கிற அரசியல்வாதிகளின் கருத்து தவறு. தடையைக் குறைப்பதிலும், உலகளாவிய பொருளாதார தொடர்பை வலுப்படுத்துவதிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் ஜார்ஜ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிதா ருத்ரா அண்மையில் வெளியிட்ட ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author