கொரோனா மீண்டும் பரவுகிறது: மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை  

Estimated read time 0 min read

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்து, சுகாதார வசதிகளை வலுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் உபகரணங்கள், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அவசியமான மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநில அரசுகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களுக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 4,302 பேர் கொரோனா தொற்றுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 864 புதிய நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. ஜனவரி 1 முதல் இதுவரை 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

You May Also Like

More From Author