நிதி மசோதா தோல்வியால் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம்  

அமெரிக்க பெடரல் அரசிற்கான தற்காலிக நிதியை சேவ் சட்டத்துடன் இணைக்கும் ஹவுஸ் சபாநாயகர் மைக் ஜான்சனின் முன்மொழிவு புதன்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
14 குடியரசுக் கட்சியினரும் மூன்று ஜனநாயகக் கட்சியினரும் வாக்களிக்கும்போது தங்கள் கட்சியின் முடிவுக்கு எதிராக வாக்களித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் மசோதாவிற்கு ஆதரவாக 202 வாக்குகளும் எதிராக 220 வாக்குகளும் கிடைத்தன.
இந்த தோல்வியால் அரசுக்கு தேவையான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதிக்குள் மசோதாவை நிறைவேற்றத் தவறினால், பெடரல் அரசுக்கு நிதி இல்லாமல் போகும்.
இந்த சிக்கலை போக்க சபாநாயகர் ஜான்சன் மாற்றுத் திட்டம் குறித்து இரு கட்சிகளிடமும் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author