ஒரு ஊடக அறிக்கையின்படி, இஸ்ரேல் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று காலை இஸ்ரேல், ஈரானை ஏவுகணைகளால் தாக்கியது.
ஈரானில் உள்ள ஒரு தளத்தை இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
இருப்பினும், தாக்குதல்கள் ஈராக் மற்றும் சிரியாவையும் தாக்கியதா என்பதை அந்த அதிகாரி உறுதிப்படுத்தவில்லை.
மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகிலுள்ள விமான நிலையத்தில் வெடி சத்தம் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் வானத்தில் ஏவுகணைகள் ஒளிர்வதைக் காட்டியது.
ஏப்ரல் 13 அன்று ஈரான், இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது.