இந்தோனேசியா : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பயணிகள் பலி!

Estimated read time 0 min read

இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 16 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்து திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

You May Also Like

More From Author