கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டு, அவை இணையதளத்தில் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மத்திய அரசு கடந்த மாதம் 18-ஆம் தேதி 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டது.
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் அதனை பெற்றுக்கொண்டார்.
இந்த நாணயங்கள் புழக்கத்தில் இல்லாததால், அறிவாலயத்தில் ரூ. 10,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
தி.மு.க. நிர்வாகிகள் அவற்றைப் பெற ஆர்வமாக இருந்ததால், அவை விரைவில் முடிந்து விட்டன.