சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தருடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பின்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீனா, சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்குதல் மற்றும் உயர்நிலை திறப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதால், உலகப் பொருளாதார மீட்சி, பிராந்திய வளர்ச்சி, சீனா மற்றும் மலேசியா இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு புதிய உந்துச் சக்தி மற்றும் வாய்ப்பை கொண்டு வரும் எனத் தெரிவித்தார்.
மேலும், தத்தமது வளர்ச்சி முன்னேற்றப் போக்கில், நெடுநோக்கு ஒத்துழைப்பை ஆழாமாக்கவும், பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சீன-மலேசிய சமூகத்தின் கட்டுமானத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்லவும், இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களை விளைவிக்கவும் இப்ராஹிமுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.