கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

Estimated read time 1 min read

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79) ) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள திரையுலகில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் கமல் நடித்த ‘சத்யா’ படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் கமலுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்மா, எர்ணாகுளம் லிசி மருத்துவமனையில் நேற்று மாலை 5:30 மணியளவில் காலமானார்.

இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை களமசேரி டவுன்ஹாலில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு ஆலுவா அருகே கருமலூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

இவரது மறைவிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் சமுக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மலையாள சினிமா பிரபலங்களான மோகன்லால், மம்முட்டி, சித்திக், குஞ்சாக்கோ போபன், மனோஜ் கே.ஜெயன், இயக்குநர்கள் ரெஞ்சி பணிக்கர், பி.உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான களமச்சேரி முனிசிபல் டவுன்ஹாலுக்கு நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தினர்.

Lalettan paying last respect to #KaviyoorPonnamma It have been her who played the mother role of Lalettan in many movies of 90s & early 2000s & many 90 s & 2000s kids, including me, grew up thinking that she’s the actual mother of #Mohanlal

R.I.P to the Mother Face of… pic.twitter.com/mMwHYcxAUA

— Akshay (@rpillaiakshay) September 21, 2024

கவியூர் பொன்னம்மா

14 வயதில் நாடகம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பொன்னம்மா, 800 படங்களுக்கு மேல் நடித்தார். அவர் நடிகர்கள் பிரேம் நசீர், சத்யன், மது, சோமன், மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற நடிகர்களுக்கு அம்மாக நடித்து பிரபலமானார். இதில் சுவாரஸ்யமாக, கவியூர் பொன்னம்மா 50 படங்களுக்கு மேல், மோகன்லாலின் அம்மாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author