நடிகர் ராணா டகுபதி பராசக்தி படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.
இப்படத்தில் வில்லனாக ரவி மோகனும், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கை மற்றும் காரைக்குடியில் நடைபெற்று முடிந்தது. தற்போது பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ள இறுதிக்கட்ட படப்பிடிப்பிலேயே ராணா டகுபதி கலந்து கொண்டுள்ளார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                                     
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                