வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மகாகவி பாரதி விழா நடைபெற்றது . இந்த நிகழ்விற்கு தமிழ்ச் சங்க தலைவர் வே. சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

சங்க புரவலர் சு.வீரராகவன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஆ.மயில்வாகனன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை பொதுச் செயலாளர் க.ஞானஜோதி சரவணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

பாரதிக்கு நிகர் பாரதி தான் என்றும், பாரதியை இன்னமும் முழுமையாக நாம் அறியவில்லை என்று வலியுறுத்தினார். மேலும் பாரதி கண்ட புதுமை பெண்களாக திகழ வேண்டும் என்று கூறினார்.

இணைச் செயலாளர் அழகேசன் ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்வை துணைத் தலைவர் கோ. ஸ்ரீதர் தொகுத்து வழங்கினார். இறுதியில் சங்க பொருளாளர் முருகவேல் நன்றி கூறினார்.

You May Also Like

More From Author