அதிகாரிகள் பொறுப்பை நடைமுறைப்படுத்துவது பற்றிய கூட்டம் நடைபெற்றது

சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் சாதனைகளை உருவாக்குவதற்கான சரியான கருத்தை நிலைநாட்டுவது மற்றும் நடைமுறைப்படுத்துவது பற்றிய கல்வி நடவடிக்கை குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரைகளும் முக்கிய உத்தரவுகளும் இக்கூட்டத்தில் படிக்கப்பட்டன. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் சாதனைகளை உருவாக்குவதற்கான சரியான கருத்தை நிலைநாட்டுவது மற்றும் நடைமுறைப்படுத்துவது பற்றிய கல்வி நடவடிக்கையின் ஏற்பாடு இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வின் நெடுநோக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்தி, சோஷலிச நவீனமயமாக்கத்தின் முன்னேற்றங்களை நனவாக்கும் முக்கிய தேவை இதுவாகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author