சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அரசுத் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 15-ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் பாரம்பரிய நட்பு நிலவி வருகிறது. இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு இடைவிடாமல் வளர்ந்து வருகிறது.
உயர் தர முறையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு மற்றும் பல்வேறு துறைகளிலான பரிமாற்றங்களில் கிடைத்த சாதனைகள், இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நன்மைகளை விளைவித்துள்ளன.
சீனா, முன்பு போலவே நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்கும் இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இலங்கையுடன் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, நாட்டின் நிர்வாக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, இரு தரப்பின் பல்வேறு பிரிவுகளிடையேயான பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.