சீனா மற்றும் சிரியா இடையே நெடுநோக்கு கூட்டாளியுறவு உருவாக்கம்

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க சீனாவுக்கு வருகை தந்துள்ள சிரியா அரசுத் தலைவர் பஷார் அல் அசாத்துடன், சீன அரசுத தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 22ஆம் நாள் மாலை ஹாங்சோ நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், சீனா-சிரியா இடையே நெடுநோக்குத்தன்மை வாய்ந்த கூட்டாளியுறவை உருவாக்குவதாக, இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.


பேச்சுவார்த்தைக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல இருதரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், நெடுநோக்குத்தன்மை வாய்ந்த கூட்டாளியுறவை உருவாக்குவது குறித்த கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author