அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

Estimated read time 1 min read

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா – சீனா இடையே எல்லை பதற்றம் அதிகரித்துள்ளதாக ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பல இடங்களில் சீன ராணுவத்துடன் மோதல் போக்கு நீடிப்பதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா – சீனா இடையே எல்லை பதற்றம் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தெரிவித்துள்ளார்.

உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எல்லைப் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை எனக் கூறியுள்ள சத்ருஜீத் கபூர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சீன ராணுவம் கூடாரங்கள் அமைத்து அத்துமீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்

உயரமான மலைப் பகுதிகளில் செயல்படக்கூடிய ‘ஷௌர்யா’ சிறப்பு கமாண்டோ படையை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ள ITBP தலைமை இயக்குநர்,எல்லை பகுதிகளில் தங்களது படையும் இந்திய ராணுவமும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author