கிர்கிஸ்தானில் பயணம் மேற்கொள்வதற்கு முன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அந்நாட்டின் ஸ்லோவோ கிர்கிஸ்தானா என்னும் செய்தி ஏடு மற்றும் கபால் தேசிய செய்தி நிறுவனத்தில் சீன-கிர்கிஸ்தான் உறவின் உயர் தர வளர்ச்சிக்கான புதிய அத்தியாயத்தைக் கூட்டாகத் திறந்து வைப்போம் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டார்.
இதில் இவ்வாண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது நிறைவு ஆண்டாகவும், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகவும் திகழ்கின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையில் சீன மக்கள் மனவுறுதியுடன் ஒரு நவீன சோஷலிச வல்லரசைப் பன்முகங்களிலும் கட்டியமைத்து, சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்குவதென்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றனர் என்றும், கிர்கிஸ்தான் 2030ஆம் ஆண்டுக்கு முந்தைய தேசிய வளர்ச்சித் திட்டத்தை ஆழமாகச் செயல்படுத்தி, புதிய கிர்கிஸ்தான என்ற கட்டுமானத்தை மும்முரமாக முன்னேற்றி வருகின்றது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார். புதிய வரலாற்றுத் துவக்கப் புள்ளியில், இரு நாடுகளின் பொது எதிர்காலத்தின் கட்டுமானத்தில் சீனாவும் கிர்கிஸ்தானும் ஈடுபட்டு, இரு நாட்டு மக்களுக்கு மேலும் சிறப்பாக நன்மை புரிந்து, இப்பிராந்திய மற்றும் உலக அமைதி, நிதானம், செழுமை ஆகியவற்றுக்கு பெரும் பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
