சீனத் தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான பாராட்டுக் கூட்டம் செப்டம்பர் 27ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாலரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் வலியுறுத்துகையில், நவ யுகத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சிந்தனைகளைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, தேசிய இனப் பணிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்கான கட்சியின் முக்கிய சிந்தனைகளைப் பன்முகங்களிலும் அமலாக்க வேண்டும்.
சீனத் தேசிய இனப் பொதுச் சமூகம் என்ற உணர்வை வலுப்படுத்துவதை முக்கிய பணியாகக் கொண்டு தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற லட்சியத்தை இடைவிடாமல் முன்னெடுத்து, சீனத் தேசிய இனப் பொது சமூக கட்டுமானத்தை முன்னேற்ற வேண்டும்.
சீனப் பாணி நவீனமயமாக்கலின் மூலம், வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியைப் பன்முகங்கிலும் முன்னேற்ற, விடா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.