சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் திங்கட்கிழமை இலங்கையில் ஒரு பயணத்தை மேற்கொண்டார், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துடன் நட்புறவான சந்திப்பை நடத்தினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வாங்யீ, பேரழிவைச் சமாளிக்க சீனா இலங்கைக்கு விரைவில் உதவிக்கரம் நீட்டியுள்ளதாகவும், இலங்கை மக்கள் பேரழிவைச் சமாளித்து விரைவில் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவார்கள் என்றும் நம்புவதாகத் தெரிவித்தார்.
ஒரே சீனா கொள்கையை இலங்கை நீண்டகாலமாக கடைப்பிடிப்பதை சீனா பாராட்டுவதாகவும், அதன் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையைத் தொடர இலங்கையை தொடர்ந்து ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் வாங் குறிப்பிட்டார். தெற்காசியாவை நோக்கிய பிராந்திய ஒத்துழைப்பை இரு தரப்பினரும் வலுப்படுத்த முடியும் என்றும், மிகவும் நியாயமான மற்றும் சமமான உலகளாவிய ஆட்சிமுறையை கூட்டாக ஊக்குவிக்க முடியும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.
புயலால் பேரழிவுக்குள்ளான இலங்கைக்கு தொடர்ந்து சீனாவின் மதிப்புமிக்க உதவிக்கு வெளியுறவு அமைச்சர் ஹெராத் நன்றி தெரிவித்தார். இலங்கை சீனாவை அதன் மிகவும் நம்பகமான நெடுநோக்கு பங்காளிகளில் ஒன்றாகக் கருதுகிறது என்றும், சீனாவுடன் நெருக்கமான உயர் மட்ட பரிமாற்றங்களைப் பராமரிக்கவும், உள்கட்டமைப்பு, கடல்சார் விவகாரங்கள், சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், இலங்கை-சீனா நெடுநோக்கு கூட்டுறவு கூட்டாண்மையை தொடர்ந்து மேம்படுத்தவும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
