சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் அல்பானீஸுடன் உள்ளூர் நேரப்படி ஜுன் 17ஆம் நாள் முற்பகல் சீன-ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் 9வது சுற்று சந்திப்பை நடத்தினார்.
லீ ச்சியாங் கூறுகையில், இவ்வாண்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆஸ்திரேலியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டதன் 10வது ஆண்டு நிறைவாகவும், சீன-ஆஸ்திரேலியப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு உருவாக்கப்பட்டதன் 10வது ஆண்டு நிறைவாகவும் திகழ்கிறது.
ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, இரு நாட்டுறவின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி, மேலும் பக்குவமடைந்த மற்றும் நிதானமான சீன-ஆஸ்திரேலியப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்கி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் செவ்வனே நன்மை புரிய சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், ஆஸ்திரேலியாவுடன் பிரதேச மற்றும் சர்வதேச நிலையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, திறப்பு மற்றும் கூட்டு வளர்ச்சியில் ஊன்றி நின்று, பிரதேச பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றி, திறப்புத் தன்மையுடைய உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அல்பானீஸ் கூறுகையில், ஒரே சீனா என்ற கொள்கையில் ஆஸ்திரேலியா ஊன்றி நின்று, தைவான் சுதந்திரத்தை எதிர்க்கிறது. சீனாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பை நிலைநிறுத்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், எரியாற்றல், மானுடவியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கான சமாளிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க விரும்புகிறது என்றார்.
தவிரவும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.