சீனாவின் வெளிநாட்டு ஜன்னலாகக் கருதப்படும் சின்ஜியாங் ஹொல்கோசி நுழைவாயில் வழியாக நடைபெறும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குப் போக்குவரத்து அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வகை வர்த்தகத்தின் மூலம், இந்நுழைவாயிலின் வளர்ச்சி மேலும் விரிவடைந்துள்ளது. இங்குள்ள சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு 2 கோடியே 56 இலட்சம் 42 ஆயிரம் டன் ஆகும். இது, கடந்த ஆண்டை விட 9.8 விழுக்காடு அதிகரித்துள்ளதுடன், நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வருகிறது.
இவ்வாண்டில் இது வரை, இந்நுழைவாயிலின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் வர்த்தகத் தொகை பெரிதும் உயர்ந்துள்ளன. ஏற்றுமதியில், வாகனங்கள், இயந்திர மின் உற்பத்தி பொருட்கள், உயர் மற்றும் புதிய தொழில் நுட்பப் பொருட்கள், ஆடைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் வாகனங்களின் ஏற்றுமதி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.