கனமழை எச்சரிக்கை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு  

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
கடிதத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீட்பு பணிக்கான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க, மாவட்ட அளவில் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author