தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

Estimated read time 0 min read

அமெரிக்கா கோரினாலும் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்காது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டெல் அவிவ் நகரில் நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய அவர், இஸ்ரேல் ராணுவம் எல்லைக் கோட்டில் தயார் நிலையில் உள்ளது என்றும், நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறினார்.

மேலும், லெபனானில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்கா தரப்பில் இருந்து இஸ்ரேலுக்கு எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லையில் சில பகுதிகளை லெபனான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது குறித்து அமெரிக்கா ஆதரவுடைய போர்நிறுத்தத் திட்டம் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author