தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கிய நகரமான மதுரையில், சுமார் ரூ.325 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வியாழக்கிழமை (அக்டோபர் 9) திறந்து வைத்தார்.
சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில், வேலம்மாள் மருத்துவமனை வளாகம் அருகில் இந்த மைதானம் அமைந்துள்ளது.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்திற்குப் பிறகு, தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது பார்க்கப்படுகிறது.
இதில் கிட்டத்தட்ட 20,000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், வீரர்களுக்கான ஓய்வறைகள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் மருத்துவ வசதிகள் உட்படப் பல நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
மதுரையில் பிரம்மாண்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் எம்எஸ் தோனி
