சீனச் சர்வதேச நட்பு மாநாட்டின் வெளிநாட்டு விருந்தினர்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனச் சர்வதேச நட்பு மாநாடு மற்றும் வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு விருந்தினர்களை அக்டோபர் 11ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்தித்துரையாடினார்.


அப்போது ஷிச்சின்பிங் வலியுறுத்துகையில், பன்னாட்டு நண்பர்களுடன் நட்புப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி அரசு சாரா தூதாண்மையின் சிறப்புப் பங்களிப்பை வெளிக்கொணர்ந்து, மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்தைக் கையோடு கைகோர்த்து கூட்டாகக் கட்டியமைக்கச் சீனா விரும்புகிறது என்றார்.

முதலாவது, முழு உலகமும் மனம் ஒருமித்த எழுச்சியுடன், மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது பற்றிய பரந்துபட்ட பொது கருத்துக்களைத் திரட்ட வேண்டும். இரண்டாவது, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி என்ற கண்ணோட்டத்துடன், மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது பற்றிய வலுவான கூட்டு சக்தியை சேகரிக்க வேண்டும்.

மூன்றாவது, திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையுடன், மனிதகுலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றும் நாகரிக அத்தியாயத்தை இயற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author