குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நிகோல் பகுதியில், அதிவேகமாக வந்த ஃபார்ச்சூனர் கார் ஒன்று நடைபாதையில் இருந்த குடும்பத்தின் மீது மோதியதில் 30 வயது தாயும், அவரது 15 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபாதையில் சோபா கவர் வியாபாரம் செய்துகொண்டிருந்த பூனம்ெபன் மற்றும் அவரது மகன் சாகர் ஆகியோர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியுள்ளது. அப்போது பொருட்கள் வாங்க வந்த தம்பதியர் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த விரால்பாய் சவஜிபாய் சௌதாரி என்பவரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், அந்த காரில் இருந்து 6 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் போதையில் இருந்தாரா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
— Jay Acharya ( Journalist ) (@AcharyaJay22_17) November 2, 2026
“>
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்துவரும் காவல்துறையினர், தடயவியல் அறிக்கைகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
