திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் வரும் 24ஆம் திருக்கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை இந்து அமைப்பினர் வரவேற்றுள்ள நிலையில், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது இந்து அமைப்புகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக போலவே தவெகவும் செயல்படுகிறது என இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
