புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனை பற்றிய வெளிநாட்டு ஆய்வுக்கான சர்வதேச மன்றக்கூட்டம்

புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனை பற்றிய வெளிநாட்டு ஆய்வுக்கான சர்வதேச மன்றக்கூட்டம் நவம்பர் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் தலைவருமான லீ ஷுலேய் துவக்க விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

2 நாட்களாக நடைபெற்ற இம்மன்றக்கூட்டம், சீனச் சமூக அறிவியல் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு கீழ், சீனாவின் ஹாங்காங், உஸ்பெகிஸ்தான், எத்தியோபியா, கிரேக்கம், ஹங்கேரி, உருகுவே ஆகிய இடங்களில் 6 சிறப்புக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

உலகத்தின் 80க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 650 விருந்தினர்கள் இக்கருத்தரங்குகளில் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author