சீன அரசவைத் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்பின்ஹூவா 20ஆம் நாள் தைவான் பிரதேச தலைவர் மே 20ஆம் நாள் வழங்கிய உரை குறித்தும் இரு கரை உறவு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகள் குறித்தும் பதிலளித்தார்.
அதில் அவர் கூறுகையில், லாய் ட்சிங்தே இன்று வழங்கிய உரையில் பொய், ஏமாற்றம், பகைமை மற்றும் எதிர்ப்பு நிறைந்திருகின்றன. தைவான் சுதந்திரம் என்ற தவறான நிலைப்பாட்டில் பிடிவாதமாக ஊன்றி நிற்பதன் மூலம் தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைத்துள்ளது. தைவான் சீனாவின் தைவான் ஆகும். ஒருபோதும் ஒரு தனி நாடு அல்ல. முன்பும் இனிமேலும் அல்ல என்று தெரிவித்தார். நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பது அனைத்து சீனர்களின் உறுதிமிக்க மனவுறுதியாகும். எவரும், எந்த சக்தியும் எந்த சாக்குபோக்கிலும் தைவான் சுதந்திரம் பிரிவினைவாத சதியைச் செயல்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவர் வலியுறுத்தினார்.
