இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய அரசாங்கத்தால் மஹாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பொது நிறுவனங்கள் துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
இதன் மூலம், எச்ஏஎல் நிறுவனம் தற்போது ஒரு எலைட் கிளப்பில் சேர்ந்து, இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியுள்ளது.
எச்ஏஎல்-ஐ மகாரத்னா அந்தஸ்துக்கு உயர்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஒப்புதலை பொது நிறுவனங்களின் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த முடிவை நிதிச் செயலர் தலைமையிலான இடை-அமைச்சகக் குழு மற்றும் அமைச்சரவைச் செயலர் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரை செய்தது.
இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
You May Also Like
More From Author
ரூ.2 கோடிக்கு தன்னேயே விற்ற 24 வயது பெண்…
June 22, 2026
சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன் – ஷேக் ஹசீனா
October 30, 2025
