இயக்குனர் ஷங்கர் இயக்கத்த்ஹில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முதன்மை வேடங்களில் நடிக்கும் கேம் சேஞ்சர் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த படம் முதலில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். படத்தை தயாரிக்கும் தில் ராஜு எக்ஸ் தளத்தில் கேம் சேஞ்சரின் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இதன்படி கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்தியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை சங்கராந்தி சமயத்தில் வெளியிட ஸ்லாட் கொடுத்த சிரஞ்சீவியின் விஸ்வம்பர படக்குழுவுக்கு தயாரிப்பாளர் தில் ராஜு நன்றி தெரிவித்தார்.
இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு
