தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கமிட்டி தற்போது கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மகளிர் காங்கிரஸின் அனைத்து மட்டத்திலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து கமிட்டிகள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு உறுப்பினர் சேர்க்கை குழுவின் புதிய உறுப்பினர்களை விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் கமிட்டி உறுப்பினர்களாக நியமிப்ப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கட்சியில் சரிவர வேலை செய்யாதவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரின் லிஸ்டை ரெடி செய்வதாகவும் சரிவர வேலை செய்யாதவர்களின் பதவிகளை மொத்தமாக பறிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.
மேலும் கட்சியில் சரிவர பணியவை செய்யாதவர்களை பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சென்னையில் குறிப்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களும் மாற்றப்படுவார்கள் என்றும் தகவல் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் மகளிர் கமிட்டி முற்றிலுமாக கலைக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.