30-ஆவது சீன யிவூ சர்வதேச பொருட்காட்சி அக்டோபர் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை, செஜியாங் மாகாணத்தின் யிவூ நகரில் நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டு வர்த்தகத்திற்கு புதிய இயக்க ஆற்றல் தந்து வெளிநாட்டு திறப்புக்கு புதிய நன்மையை உருவாக்குதல் என்ற கருப்பொருளில் இந்த பொருட்காட்சி நடைபெற்றது. சுமார் ஒரு லட்சம் சதுரமீட்டர் பரப்பளவுக் கொண்ட இப்பொருட்காட்சியில் நிறுவனங்களுக்கு புதிய சுற்று வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மேலதிக நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்முதலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கொள்முதலாளர்கள் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு என்பதற்கான ஒத்துழைப்பு மாதிரியாக, துபாயில் உள்ள யிவூ சந்தை, விநியோக சங்கிலியின் செலவு மற்றும் சரக்கு போக்குவரத்து நேரம் ஆகியவற்றைக் குறைத்து உலகளாவிய வர்த்தகர்களுக்கு விலை நன்மை கொண்ட பொருட்களை வழங்குகிறது. அதன் மூலம் தொடர்புடைய பிரதேசங்களில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
யிவூ சர்வதேச வர்த்தகச் சந்தை, நவீனமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தகவல்மயமாக்கல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு சரக்கு வர்த்தக சந்தையாகும்.
நாள்தோறும் இசந்தையில் வந்துசெல்லும் வணிகர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டும். இங்கிருந்து சுமார் 60 சதவீத தயாரிப்புகள், 140-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிகிறது.