உலகளவிலான செயற்கை நுண்ணறிவு போட்டித் திறனில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் குறித்த தரவரிசை பட்டியலை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தில் ஆசியாவின் தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளையும் இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு போட்டித்திறனில் இந்தியா 21.59 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளதாகவும், 2023ல் 7வது இடத்தில் இருந்த இந்தியா 2024ல் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் சீனாவை விடப் பின்தங்கிவுள்ள இந்தியா, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் வளர்ந்த பொருளாதார நாடுகளை விஞ்சியுள்ளதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
