ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸுக்கு டிசம்பர் முதல் நாள் மீண்டும் கடிதம் அனுப்பினார். ஐ.நாவுக்கான ஜப்பானிய நிரந்தரப் பிரதிநிதி கசுயுகி யமசாகி நவம்பர் 24ஆம் நாள் குட்ரேஸுக்கு அனுப்பிய கடிதத்திலுள்ள போலிவாதங்களை ஃபூசொங் கடுமையாக மறுத்துரைத்து, சீன அரசின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினார். ஃபூசொங் அனுப்பிய இக்கடிதம், ஐ.நா பொது பேரவையின் அதிகாரப்பூர்வ ஆவணமாக, அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்படும்.
ஐ.நா சாசனத்தின்படி, அதன் உறுப்பு நாடுகள் சர்வதேச உறவில் அச்சுறுத்தல் மற்றும் இராணுவ ஆற்றலைப் பயன்படுத்தக்கூடாது. எந்த நாட்டின் உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்தையும் சீர்குலைக்கக்கூடாது. ஜப்பானிய தலைமையமைச்சர் சனே தகைச்சி வெளியிட்ட தவறான கூற்று, ஐ.நா சாசனத்தின் குறிக்கோள், கோட்பாடு மற்றும் தொடர்புடைய விதிகளை மீறியுள்ளது. சர்வதேச சமூகம், அவரது தவறான கூற்றின் பாதிப்புகளைத் தெரிந்துகொண்டதோடு, இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை ஜப்பான் சீர்குலைக்கும் பேராசை பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஃபூசொங் இக்கடிதத்தில் தெரிவித்தார்.
