தொழிலதிபர் ரத்தன் டாடா உயில் விவரம் வெளியாகியுள்ளது  

சுமார் 10,000 கோடி ரூபாய் சொத்து இருக்கும் மறைந்த தொழிலதிபர்-பரோபகாரர் ரத்தன் டாடா, அவரது உடன்பிறப்புகளுக்காக ஒரு பங்கை விட்டுச் சென்றாலும், அவரது சமையல்காரர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் செல்ல நாய் டிட்டோவுக்கும் உயில் எழுதி வைத்துள்ளார்.
ரத்தன் டாடா தனது உயிலில் டிட்டோவுக்கு “வரம்பற்ற கவனிப்புக்கான” ஏற்பாடுகளைச் செய்திருக்கார் என்றும் அவரது சமையல்காரர் சுப்பையா மற்றும் நிர்வாக உதவியாளர் சாந்தனு நாயுடு ஆகியோருக்கும் ஒரு பங்கை ஒதுக்கியுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், தனது செல்லநாய் டிட்டோவை டாடாவின் நீண்டகால சமையல்காரரான ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் அவருக்கு சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.

You May Also Like

More From Author