அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி; ராயல் என்ஃபீல்ட்அதிகாரி வலியுறுத்தல்  

Estimated read time 0 min read

அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும், அவற்றின் என்ஜின் திறன் எதுவாக இருந்தாலும், ஒரே மாதிரியான 18% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த்த லால் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் இரு சக்கர வாகனங்களுக்கான வரி விகிதத்தை மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், சித்தார்த்த லால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஒருவேளை இந்தத் திருத்தப்பட்ட வரி விதிப்பு முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 350 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
ஆனால், 350 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்கள் ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்பட்டு, 40% ஜிஎஸ்டி விதிக்கப்படலாம்.

You May Also Like

More From Author