சீனச் சுங்கத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை 21லட்சத்து 79ஆயிரம் கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டை விட, 2.9விழுக்காடு அதிகரித்துள்ளது.
இவ்வாண்டில் சீன வெளிநாட்டு வர்த்தக கட்டமைப்பின் மேம்பாட்டுடன், மேலதிக உயர் நிலை, பசுமை மற்றும் நுண்மதி நுட்ப உற்பத்திப் பொருட்கள் சர்வதேச சந்தைக்குச் செல்லப்பட்டுள்ளன.
அரசு சாரா தொழில்நிறுவனங்களின் ரீதியில், இந்த ஆண்டு முற்பாதியில் உயர் தொழில்நுட்ப உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட, 12.5விழுக்காடு உயர்ந்துள்ளது. கப்பல், வாகனம், பிரத்தியோகமான சாதனங்கள் முதலிய பொருட்களின் ஏற்றுமதி 10விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது. இறக்குமதியில் பெட்ரோ கெமிக்கல், மின்னணு உள்ளிட்ட உயர் நிலை உபகரணங்கள் சீரான அதிகரிப்பு போக்கை நிலைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.