ஜப்பானில் மீட்புப் பணிக்கு உதவியளிக்க விரும்புகின்ற சீனா

ஜப்பானின் இஷிகாவா மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் குறித்து சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜப்பானின் தலைமையமைச்சர் கிஷிடா ஃபுமியோவுக்கு ஜனவரி 3ஆம் நாள் ஆறுதல் தெரிவித்தார்.


சீன அரசின் சார்பில் உயிரிழந்தோருக்கு ஆழந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கு மனமார்ந்த ஆறுதலையும் லீ ச்சியாங் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஜப்பான் அரசின் தலைமையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வெகு விரைவில் இன்னல்களைச் சமாளித்து, தாயகத்தை மீண்டும் கட்டியமைப்பது உறுதி என நம்புவாதாக தெரிவித்தார்.


மேலும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 3ஆம் நாள் கூறுகையில், ஜப்பானில் மீட்புப் பணிக்கு இன்றியமையாத உதவியை வழங்க சீனா விரும்புகிறது என்றார்.

You May Also Like

More From Author