சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் செழிப்பு குறியீடு மீட்சி

2023ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் செழிப்பு குறியீட்டைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஜனவரி 3ஆம் நாள் வெளியிட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் தேவை குறைவு மற்றும் சில பகுதிகளில் தீவிர காலநிலை காரணமாக, சரக்கு போக்குவரத்து அலுவல்களின் அதிகரிப்பு வேகம் ஓரளவு குறைந்துள்ளது என்ற போதிலும், டிசம்பர் திங்களில் இந்தக் குறியீடு மேலும் மீட்சியடைந்ததோடு, அலுவல்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வந்துள்ளது.


2023ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் செழிப்பு குறியீடு 53.5 விழுக்காட்டை எட்டி, நவம்பரில் இருந்ததை விட 0.2 புள்ளிகள் அதிகரித்தது.

மேலும், மொத்த அலுவல்களின் எண்ணிக்கை, புதிய முன்பதிவுப் படிவங்கள், மூலதன விற்றுமுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய குறியீடுகள் விரிவாக்க வரம்புக்குள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author