12ஆவது உலக விளையாட்டுப் போட்டி 17ஆம் நாளிரவு சீனாவின் செங்டு நகரில் சிறப்பாக நிறைவடைந்தது. கடந்த 11 நாட்களில் 116 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4000 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். நடப்பு விளையாட்டுப் போட்டியில் சீனாவின் விளையாட்டு வீரர்கள் குழு 36 தங்கம், 17 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களை வென்றனர். தங்கப் பதக்க வரிசை மற்றும் பதக்க வரிசையில் சீனா முதலிடம் வகித்து உலக விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டது முதல் இதுவரை தலைசிறந்த பதிவை உருவாக்கியது.
அடுத்த உலக விளையாட்டுப் போட்டி ஜெர்மனியின் கார்ல்ஸ்ரூஹே நகரில் நடைபெறவுள்ளது.