இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை தொடங்கி வைத்தார் மோடி  

திங்களன்று (அக்டோபர் 28) டாடா-ஏர்பஸ் விமான ஆலையை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குஜராத் மாநிலம் வதோதரா சென்றடைந்தனர்.
அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர்கள் மோடி மற்றும் சான்செஸ் ஆகியோர் வதோதராவில் மெகா ரோட் ஷோ நடத்தினர்.
அதன் பின்னர், பிரதமர் மோடி, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து, டாடா மேம்பட்ட சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை கூட்டாகத் திறந்துவைத்தனர்.
ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ராணுவ போக்குவரத்துக்கு இந்திய விமானந்தப்படை 56 சி-295 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை கொடுத்திருந்தது.
இதில் முதல் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் நிலையில், 40 விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

You May Also Like

More From Author