திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற நிர்வாகத்தினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி மற்றும் வடக்கு வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகம் திறந்தவெளியில் மலம் கழித்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.