கோவை விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐடி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக களஆய்வு மேள்கொள்ள உள்ளார். முதல்கட்டமாக இன்று கோவையில் தொடங்குகிறார்.
இதேபோல் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புதிய நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றுள்ளதா என்ற கள ஆய்வை கோவையில் இருந்து தொடங்கினார்.
கோவையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையம் முதல் எல்காட் தொழில்நுட்ப பூங்கா வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பறையாட்டம், பாரம்பரிய நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐடி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். ₹114.16 கோடி செலவில் 3.04 ஏக்கர் பரப்பில் 8 தளங்களுடன் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.