மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், நவம்பர் 7ம் தேதி விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 4 ஆயிரத்து 992 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 106.53 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 106.10 அடியாக குறைந்துள்ளது.