மேலும் 9 நாடுகளுக்கு வீசா இல்லா அனுமதி:  சீனா அறிவிப்பு

சீனா மேலும் 9 நாடுகளின் குடிமக்கள் வீசா இல்லாமல் வருவதற்கு அனுமதியளித்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது.

அதன்படி, ஸ்லோவாக்கியா, நோர்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ, லீச்டென்ஸ்டீன், தென்கொரியா ஆகிய 9 நாடுகளுக்கு சீனா அனுமதி அளித்தது. 2024 நவம்பர் 8ஆம் நாள் முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் வரை இந்த விசா விலக்கு கொள்கை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் வீசா தேவையின்றி சீனாவில் வணிகம், சுற்றுலா, உறவினர்கள் சந்திப்பு அல்லது சீனா வழியாக வேறு நாடுகளுக்கு செல்வதற்கு 15 நாட்களுக்குள் பயணிக்கலாம்.

விசா இல்லா அனுமதிக்கான நாடுகளின் பட்டியல் மேலும் அதிகரிக்கப்பட்டதுடன், இது மக்களிடையே தொடர்பு மற்றும் பயணம் மேற்கொள்ள மேலும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author